அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 98ஆவது பிறந்த நாள் விழா, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இன்று கொண்டாடப்பட்டது.
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வடமலைப் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, அதிமுக கட்சிக் கொடியேற்றினார். அவருக்கு கட்சியின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றினார்.
ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளந்தளிர் முத்து, அவைத்தலைவர் என்.பீ.முத்து, காயல் மவ்லானா, புரட்சி சங்கர், இல்யாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்துரையாற்றினர்.
நிறைவில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நகர்மன்றத் தலைவர் இனிப்பு வழங்கினார்.
தகவல் & படங்கள்:
A.S.புகாரீ
மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |