கொம்புத்துறையில் (கடையக்குடி) இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் - DCW தொழிற்சாலை கழிவுகள் சேரும் ஓடைக்கு தெற்கிலும், வங்காள
விரிகுடா கடலுக்கு மேற்கிலும் அமைந்துள்ளது - காயல்பட்டினம் நகராட்சிக்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்
ரஹ்மான் மூலம் தரப்பட்டுள்ள, சர்வே எண் 278 இடம்.
இந்த இடத்தை நோக்கி - கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம் வழியாக பயணம் செய்யும் போது, கொம்புத்துறை பகுதியை அடைந்தவுடன் -
முதலில் தென்படும் பிரதான கட்டிடம், தூய ஸ்தீஃபன் தேவாலையம் ஆகும். இதன் அருகில் தான் - இப்பகுதியின் இறுதி மின்மாற்றி (TRANSFORMER)
அமைந்துள்ளது. மின்வாரியத்தின் High Tension (HT) LINE (உயர் அழுத்த இணைப்பு) இந்த மின்மாற்றியுடன் நிறைவாகிறது.
அந்த மின்மாற்றியில் இருந்து, கிழக்கு நோக்கி, சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை உள்ளது. மேலும் அந்த சாலையில் உள்ள மின்
கம்பங்களில் 5 கம்பிகள் கொண்ட, குறைந்த அழுத்த (Low Tension [LT] Line) இணைப்பு உள்ளது.
அதன் பிறகு - வடக்கு நோக்கி சாலை திரும்பி, சுமார் 400 மீட்டருக்கு தார் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் உள்ள மின் கம்பங்களில்
கொஞ்ச தூரம், 3 கம்பிகள் கொண்ட, குறைந்த அழுத்த (Low Tension [LT] Line) இணைப்புகளும், அதன் பிறகு 2 கம்பிகள் கொண்ட,
குறைந்த அழுத்த (Low Tension [LT] Line) இணைப்புகளும் உள்ளன.
வடக்கு நோக்கிய இந்த தார் சாலை முடிவுற்றவுடன், மின் கம்பங்களும், வீடுகளும் இல்லாத காட்டு பகுதி துவங்குகிறது.
தொடரும் சுமார் 100 மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த சாலையாகவும், அதன் பிறகு 100 மீட்டர் தூரம் சரல் சாலையாகவும் உள்ளது.
சரல் சாலை முடிவுற்றவுடன், தொடர்வது மண் சாலையாகும். இது 400 மீட்டருக்கும் மேலான தூரமாகும். இங்கிருந்த மேற்கு நோக்கி, சாலை
அமைக்கப்பட்டு, நகராட்சிக்கு வழங்கப்பட்ட இடத்தினை அடைய வேண்டி இருக்கும்.
கடலுக்கும், நீரோடைக்கும் அருகில் உள்ள இந்த பகுதியில் தற்போது நீர் தேங்கி காணப்படுகிறது.
தெருவிளக்குகள் முற்றிலும் இல்லாத இக்காட்டு பகுதியில், பயோ காஸ் மையம் தனித்து இயங்குவதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள்
தனியானவை. கடலுக்கு மிக அருகாமையில் உள்ளதால் - இயற்கை சீற்றங்கள் மூலம் உள்ள பிரச்சனைகளும் தனியானவை.
அவைகள் தவிர - பிற அடிப்படையான பிரச்சனைகளும் இவ்விடம் குறித்து உள்ளன.
தற்போது இப்பகுதியில் மின் இணைப்பு கிடையாது. இங்கு பயோ காஸ் மையம் அமைத்திட மின் இணைப்பு புதிதாக கொண்டு வரவேண்டும்.
இங்கிருந்து உருவாகும் மின்சாரத்தினை எவ்வாறு அருகில் உள்ள தெரு விளக்குகளுக்கு கொண்டு செல்வது என்பது அடுத்த முக்கிய
பிரச்சனையாகும்.
ஆற்காடு நகராட்சியில் அமைந்துள்ள பயோ காஸ் மையம் இடத்திற்கு எதிரிலேயே மின்மாற்றி உள்ளது. எனவே - அங்கு எளிதாக, பயோ காஸ்
மையத்தில் இருந்து மின்மாற்றி வரை, தரை வழியாக, மின் கம்பிகள் புதைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் - சர்வே எண்
278இல் பயோ காஸ் திட்டம் அமைந்தால், அருகில் உள்ள மின்மாற்றி தூரம் சுமார் 2 கிலோ மீட்டர் ஆகும்.
அதுமட்டும் அல்ல, மின் கம்பிகள் புதைக்கப்பட்டு தரை வழியாக கொண்டு செல்லவேண்டிய பாதையும், சாலையும் எந்தெந்த தனியார் நிலங்களில் எல்லாம்
அமையும் என்பதும், உரிமையாளர்களின் அனுமதியும் ஊர்ஜிதம் இல்லை.
புதிய சாலைகள் உட்பட தொடர்பான பணிகளுக்கு, நகராட்சி பொது நிதியில் இருந்து பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
வழங்கப்பட்டுள்ள நிலத்தை சுற்றி BUFFER ZONE அமைப்பது நகர்மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், வழங்கப்பட்டுள்ள அணுகு சாலைக்கான நிலம் CRZ-1 பகுதிக்குள் அமைந்துள்ள நிலையில் - இவ்விடத்தில் கம்போஸ்ட் யார்டு அமைவதன் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.
இச்சூழலில் - நகரில் பயோ காஸ் திட்டம் அமைந்திட பல அரசு இடங்கள் இருக்க, அவற்றில் ஏதாவது ஒரு நிலத்தில் பயோ காஸ் திட்டத்தினை
கொண்டு வராமல், (சாலை CRZ பிரச்சனை சரி காணப்பட்டு, BUFFER ZONE பிரச்சனை சரி காணப்படாமல்) இவ்விடத்தில் பயோ காஸ் திட்டம்
கொண்டு வர, இவ்விடத்தினை சுற்றி, சாலைகளுக்கும், பிற பணிகளுக்கும் - நகராட்சி பணம் செலவு செய்யப்படுவது கேள்விக்குரியதாகும்.
புகைப்படங்கள், வரைப்படம் மற்றும் தகவல்:
சாளை பஷீர் |