தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப வங்கிக் கணக்கு இல்லாதோர் உடனடியாக வங்கிக் கணக்கு துவக்கிடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அனைத்து வங்கிகளும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கி கணக்காவது துவங்க வேண்டும் என, சுதந்திர தின விழா உரையில் பிரதமர் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் வங்கிக் கிளைகள் அனைத்தும், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் வங்க் கணக்கே இல்லாத குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு வங்கி கணக்கு துவங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வங்கிகள் தங்களின் சேவைக்குட்பட்ட பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பின் படி, அனைத்துக் குடும்பங்களிலும் ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்றன. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தின் வங்கி கலந்தாய்வுக் குழுக் கூட்டம் வரும் 23 ஜனவரி 2015இல் நடக்கிறது. இதில், அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு விட்டதாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.
எனவே, ஏதோனும் குடும்பம் வங்கி கணக்கை துவங்காத பட்சத்தில், தங்கள் அருகாமையில் உள்ள வங்கிகளை அல்லது வங்கி சேவகரை உடனடியாகத் தொடர்பு கொண்டு வங்கி கணக்கை துவங்க வேண்டும்.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |