கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் - சமீபத்தில் நிறைவுற்ற பருவ மழையினை தொடர்ந்து, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம், நேற்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் சித்தா மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் வேண்டுகோளை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மருத்துவமனையின் சித்தா மருத்துவர், அதிகாரிகள், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர், அதிகாரிகள், 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அந்தோணி, கலங்கரை விளக்கம் பெண்கள் தன்னார்வலர் குழுவினர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|