தமிழக அரசின் உட்கட்டமைப்பு வெற்றிடம் நிரப்பும் நிதி (INFRASTRUCTURE GAP FILLING FUND) 2013-14 மூலம், காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டிட, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரருக்கு - ஒப்பந்தப்பணிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் - புதிய கட்டிடப் பணிகளை துவங்கிட தோதுவாக, பழைய கட்டிடத்தை இடித்திட - ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, தினத்தந்தி நாளிதழில் நேற்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்விளம்பரத்தில் - ஒப்பந்தப்புள்ளி அட்டவணை, ஜனவரி 29 வரை வழங்கப்படும் என்றும், பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி 30 அன்று திறக்கப்படும் என்றும், பணிகள் 10 நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|