இந்தியப் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தூய்மை இந்தியா’ திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம், காயல்பட்டினம் இமாமுனா கஸ்ஸாலீ ரழியல்லாஹு அன்ஹூ அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் எஸ்.எம்.எம்.ஏ. டியூஷன் மையம் சார்பில், இம்மாதம் 16ஆம் நாளன்று 19.00 மணியளவில், குத்துக்கல் தெருவில் நடைபெற்றது.
நிறுவனத்தின் 15ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இச்சிறப்பு நிகழ்ச்சியில், மவ்லவீ பிரபு செய்யித் முஹ்யித்தீன், மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஷேக் அப்துல் காதிர், ஹபீப் முஹம்மத், மஹ்மூத் நெய்னா, அப்துல் ரஊஃப், ஹாஃபிழ் நஈம் உதுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் இஸ்மாஈல் ஸக்காஃபீ அஸ்ஹரீ, தூய்மை இந்தியா எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். உள்ளம், உடல், இருப்பிடம் என அனைத்தின் தூய்மை குறித்து இஸ்லாமிய பார்வையில் அவரது உரை அமைந்திருந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றனர்.
தகவல்:
ஜெ.எம்.ஏ.ஆர்.காதிரீ |