க்ளோபல் ஈவண்ட் மேனேஜர்ஸ் சார்பில் “டேலண்ட் கிட்ஸ் 2014-15” எனும் தலைப்பில் நடைபெற்ற - பள்ளிகளுக்கிடையிலான ஓவியப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவ-மாணவியர் பல பரிசுகளை வென்றுள்ளனர்.
முதல் பிரிவு ஓவியப் போட்டியில், எல்.கே.ஜி. வகுப்பைச் சேர்ந்த எம்.எம்.ஹமீத் அஃப்னான் முதல் பரிசையும், இசட்.ஏ.ஆயிஷா ஃபர்ஹா இரண்டாவது பரிசையும், யு.கே.ஜி. வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஷேக் ஷாஹுல் மூன்றாவது பரிசையும் வென்றனர்.
இரண்டாம் பிரிவிற்கான போட்டியில், மூன்றாம் வகுப்பு மாணவர் ஏ.அல்தாஃப் முதற்பரிசையும், முதல் வகுப்பைச் சேர்ந்த கே.எம்.ஃபாத்திமா ஃபத்தீனா இரண்டாவது பரிசையும், எம்.நூர் ஃபாயிஸா மூன்றாவது பரிசையும் வென்றுள்ளனர்.
மூன்றாம் பிரிவிற்கான போட்டியில், ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஆர்.சித்தி கதீஜா மஷூரா முதற்பரிசையும், நான்காம் வகுப்பைச் சேர்ந்த எம்.எம்.கதீஜா நாஸிரா இரண்டாவது பரிசையும், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஆமினா ஃபரீதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.
நான்காம் பிரிவிற்கான போட்டியில், ஏழாம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.எல்.சுலைஹா அஃப்ரா முதற்பரிசையும், எட்டாம் வகுப்பைச் சேர்ந்த எம்.எம்.ஆமினா முஸ்ஃபிரா இரண்டாவது பரிசையும், ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.ஹபீபா மூன்றாம் பரிசையும் வென்றனர்.
ஐந்தாம் பிரிவிற்கான போட்டியில், 11ஆம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.ஏ.உல்ஃபத் முதற்பரிசையும், 10ஆம் வகுப்பைச் செர்ந்த எம்.ஏ.ஏ.முஷர்ரஃபா சுல்தானா இரண்டாவது பரிசையும், 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ஆர்.எஸ்.நமீரா மூன்றாம் பரிசையும் வென்றனர்.
பரிசு பெற்ற அனைத்து மாணவ-மாணவியரையும் பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |