காயல்பட்டினம் வட பாக கிராம வருவாய் பிரிவில், காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்கள், வெவ்வேறு சர்வே எண்கள் வாயிலாக சுமார் 23 ஏக்கர் உள்ளது. இதில் ஒரு சில - DCW தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு அருகாமையில் உள்ளது. காயல்பட்டணம்.காம் வசம் உள்ள சில ஆவணங்கள், அதில் குறைந்தது ஒரு இடத்திலாவது, DCW தொழிற்சாலை - தனது உப்பளத்தை அமைத்துள்ளதாக தெரிவிக்கிறது.
காயல்பட்டினம் வட பாக கிராம சர்வே எண் 186; இதன் விஸ்தீரணம் - 2 ஏக்கர் 55 சென்ட். ஆவணங்கள் இதனை - காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கிறது.
DCW தொழிற்சாலை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் - 2226.34 ஏக்கர் நிலத்தில் உப்பளங்கள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது. இதில் காயல்பட்டினம் வட பாக கிராம நிலங்கள், 1230.33 ஏக்கரும், தென் பாக கிராம நிலங்கள் - 2.69 ஏக்கரும் அடங்கும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சர்வே எண்களில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 186ம் உண்டு..
இந்த இடத்திற்கு அருகில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, சர்வே எண்கள் 112, 175, 176, 181 ஆகியவையும் உள்ளன. இந்த இடங்கள் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள, DCW தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள உப்பளங்கள் விபரத்தில் இல்லாவிட்டாலும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள - CRZ வரைப்படம், இவ்விடங்களையும் உப்பளங்களாக காண்பிக்கிறது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:15 / 25.01.2015] |