ஊழல் எதிர்ப்பு இயக்கம் காயல்பட்டினம் கிளை பொதுக்குழுக் கூட்டத்தில், அவ்வமைப்பிற்கு, புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் ‘மாஸ்டர்’ மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், ஆஸாத் தெருவிலுள்ள அதன் அலுவலகத்தில், இன்று (ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில், எம்.எல்.ஹாரூன் ரஷீத் தலைமையில் நடைபெற்றது.
விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளைக்கு பின்வருமாறு புதிய நிர்வாகிகளை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது:-
தலைவர்:
எம்.ஏ.புகாரீ (48)
துணைத்தலைவர்:
ஏ.எஸ்.புகாரீ
செயலாளர்:
பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ்
துணைச் செயலாளர்கள்:
(1) ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
(2) எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம்
பொருளாளர்:
எம்.எல்.ஹாரூன் ரஷீத்
செய்தி & மக்கள் தொடர்பாளர்கள்:
(1) ‘மாஸ்டர்’ மாலிக்
(2) எஸ்.கே.ஸாலிஹ்
(இவர்கள் தவிர 7 பேர் மேலதிக செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.)
தீர்மானம் 2 - சாலை முறைகேட்டுக்கெதிராக நடவடிக்கை:
காயல்பட்டினம் நெய்னார் தெரு, அப்பா பள்ளித் தெருவில் புதிதாகப் போடப்பட்டுள்ள சாலையில் உள்ள முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - புதிய உறுப்பினர்களை முடிவு செய்தல்:
அமைப்பில் புதிதாக உறுப்பினர்களாக விரும்புவோரின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, இறுதி முடிவு செய்யும் அதிகாரத்தை, செயற்குழுவிற்கு இக்கூட்டம் வழங்குகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |