இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.00 மணியளவில் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத் கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா முன்னிலை வகிக்க, தலைமை தாங்கிய பள்ளி துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர் தேசிய கொடியேற்றி, வாழ்த்துரையாற்றினார். பின்னர் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி பாடல் குழுவினரால், நாட்டுப்பற்றுப் பாடல்கள் மற்றும் பள்ளி நிறுவனர் எல்.கே. அவர்களின் நினைவுப் பாடல்கள் பாடப்பட்டன.
எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஊமைத்துரை சாமுவேல் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. அரபி மொழி ஆசிரியர் ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில், பள்ளியின் சாதனை மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை, பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் செய்திருந்தனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |