இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் குடியரசு நாள் விழா இன்று காலை 10.00 மணியளவில் கொண்டாடப்பட்டது.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் முன்னிலை வகிக்க, காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தேசிய கொடியேற்றினார்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாஜுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்க, நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூறினார்.
கட்சியின் நகர நிர்வாகிகளான மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் மற்றும் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவியரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கடந்தாண்டு (2014) நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 22:25 / 26.01.2015] |