பிரபல கேலிச்சித்திர கலைஞர் ஆர்.கே. லக்ஷ்மன் (ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் லக்ஷ்மன்) - இன்று, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் காலமானார். அவருக்கு வயது 94.
மைசூரில் 1931ம் ஆண்டு பிறந்த இவர், அவரின் பெற்றோருக்கு 6வது (கடைசி) பிள்ளை ஆவார். இவரின் மூத்த சகோதார் - பிரபல எழுத்தாளர், ஆர்.கே. நாராயன் (Swami and Friends, The Bachelor of Arts, The English Teacher, Waiting for the Mahatma, The Guide, The Man-eater of Malgudi).
பல பத்திரிக்கைகளில் கேலிச்சித்திரங்கள் வரைந்துள்ள ஆர்.கே. லக்ஷ்மன், மும்பையில் இருந்து வெளிவரும் TIMES OF INDIA நாளிதழில், 1951ம் ஆண்டு முதல் YOU SAID IT என்ற தலைப்பில் கேலி சித்திரங்கள் வரைய துவங்கியதன் மூலம் பிரபலமானார்.
சாதாரண மனிதன் (COMMON MAN) என்று அழைக்கப்பட்ட கதாபாத்திரம் இடம்பெறும் இக்கேலிச்சித்திரங்கள், நாட்டில் நிலவும் ஊழல் உட்பட பல பிரச்சனைகளை சாமானிய மக்களுக்கு - நகைச்சுவையான வகையில் எடுத்து கூறியது. அரை நூற்றாண்டிற்கும் மேலாக இவரின் சித்திரங்கள் TIMES OF INDIA நாளிதழில் தொடர்ந்து வெளிவந்தது.
இவரின் சேவையை பாராட்டி - 1984ம் ஆண்டு RAMON MAGSAYSAY விருது (Journalism, Literature and Creative Communication Arts) இவருக்கு வழங்கப்பட்டது. 2005ம் ஆண்டு இந்திய அரசு, இவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கியது.
அவர் வரைந்த கேலிச்சித்திரங்களில் சில:-
|