இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் நாளன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு நாள் விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் தலைமையேற்று, தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தாளாளரை வரவேற்று, தலைமையாசிரியை மு.ஜெஸீமா சால்வையளித்து கண்ணியப்படுத்தினார்.
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவியரின் தேசிய ஒருமைப்பாட்டுப் பாடலைத் தொடர்ந்து, நன்றியுரைக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியையர், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
கடந்தாண்டு (2014) சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |