இந்தியாவின் 66ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் நாளன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி எனும் தைக்கா பள்ளியில், குடியரசு நாள் விழா காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு அனுசரணையளித்த கே.வி.ஏ.டீ.புகாரீ ஹாஜி அறக்கட்டளையின் அறங்காவலர் கே.வி.ஏ.டீ.கபீர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
‘கவிமகன்’ காதர் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்குத் தலைமை தாங்கிய - பள்ளியின் கல்வி வளர்ச்சிக் குழு தலைவரும் - 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் தலைமையுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியையர், பெற்றோர், மாணவ-மாணவியர், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், அதன் உறுப்பினர்களான எஸ்.ஐ.அஷ்ரஃப், எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
தைக்கா பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தைக்கா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |