காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில், இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் அண்மையில் திறப்பு விழா கண்டது. இவ்வரங்கில், முதல் முறையாக நகரளவிலான இறகுப்பந்து சுற்றுப்போட்டி - சாளை மக்காம் கோப்பைக்கான போட்டியாக இம்மாதம் 28, 29 நாட்களில் (நேற்றும், இன்றும்) நடத்தப்படுகிறது.
13 அணிகள் பங்கேற்கும் இச்சுற்றுப்போட்டி இரண்டு பிரிவுகளாக லீக் முறையில் நடத்தப்படுகிறது. இரண்டு பிரிவுகளுக்கான போட்டிகளின் நிறைவில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் 3 அணிகள் சூப்பர் சிக்ஸ் எனும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும்.
நேற்று முதல் போட்டியை, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் நிர்வாகக் குழு உறுப்பினர் ஃபஸ்லுல் ஹக் துவக்கி வைத்தார். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் நடத்தப்படும் இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி, இன்று நடைபெறவுள்ளது.
இச்சுற்றுப் போட்டிக்கான பரிசுகளுக்கு, KSC உறுப்பினரும், காயல்பட்டினம் நகர்மன்ற 06ஆவது வார்டு உறுப்பினருமான ஏ.கே.முஹம்மத் முகைதீன் அனுசரணையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
M.B.S.சுலைமான்
கூடுதல் தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
KSC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|