புனித உம்றா வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தலைமையில் சுமார் 120 பேர் அடங்கிய குழுவினர் காயல்பட்டினத்திலிருந்து சென்றிருந்தனர்.
அவர்களுக்கு, சஊதி அரபிய்யா ஜித்தா, ரியாத் வாழ் காயலர்கள் சார்பில், இம்மாதம் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் ஜித்தாவில் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் அவர்களது புனிதமான வாழ்வியல் முறை, அவர்களை நேசிப்பதால் கிடைக்கப்பெறும் ஈருலக பயன்கள் குறித்து கத்தீப் உரையாற்றினார்.
நிறைவில் அனைவருக்கும், காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது,
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா தலைமையில், வங்காளம் எம்.என்.முஹம்மத் அனஸுத்தீன், பாளையம் ஏ.ஜெ.ஷெய்க் அப்துல்லாஹ் ஸாஹிப், சோனா ஏ.டீ.ஹுஸைன் ஹல்லாஜ், எஸ்.எம்.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ், சோல்ஜர் எஸ்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப், பிரபு எம்.எஸ்.செய்யித் முஹ்யித்தீன், ஹாஃபிழ் கே.வி.எம்.ஏ.ஷாஹ் மீரான் ஸாஹிப் ரியாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான் |