காயல்பட்டினம் நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், எல்.கே.மேனிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று காலை 10.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ஜாஹிர், துணை ஆய்வாளர் சோமசுந்தரம், மருத்துவ அலுவலர் ப்ரியதர்ஷிணி ஆகியோர் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள், இதில் மாணவர்களின் பொறுப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வுரையாற்றினர்.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம், டெங்கு தடுப்பு உறுதிமொழியை முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நூற்றுக்கணக்கான மாணவர்களை இவ்வாறு ஓரிடத்தில் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாகவும், நகரின் அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை நடத்திட திட்டம் உள்ளதாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |