திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம், வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் நாளன்று திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது. இம்முகாம் தொடர்பான விபரங்களை, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம் என அப்பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த துளிர் பள்ளியின் செய்தியறிக்கை:-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒருங்கிணைப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருச்செந்தூரில் 10.02.2015 செவ்வாய்கிழமையன்று நடைபெற உள்ளது என தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அறிவித்துள்ளார்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகான பல்துறை மருந்துவ பரிசோதனை, அடையாள அட்டை பெறுதல், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய பதிவு, பராமரிப்பு உதவித்தொகை, திருமண நிதியுதவி, கடனுதவி, பஸ் பாஸ், மூடநீக்கு சாதனங்கள், மூக்கு கண்ணாடி, காதொலி கருவி, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஏனைய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த முகாமின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது:-
இவ்வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாற்றத் திறன் சிறார்கள், இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த முகாம் பற்றி மேலும் விபரங்கள் பெற விரும்புவோர், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி அலுவலக மேலாளரை வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சித்தி ரம்ஸான்
அலுவலக மேலாளர் - துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |