காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தில், கற்புடையார் பள்ளியின் தென்பகுதிக்கு எதிரில், கற்புடையார் பள்ளி சாலை - ஈக்கியப்பா தைக்கா தெரு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது மத்ரஸா தர்பிய்யத்தில் அத்ஃபால்.
திருமறை குர்ஆனை தஜ்வீத் முறையில் பார்த்து ஓத - மனனம் செய்ய பயிற்றுவித்தல், மார்க்க அடிப்படைக் கல்வியைக் கற்பித்தல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு அமையப்பெற்றுள்ள இந்த மத்ரஸாவின் துவக்க விழா 01.10.2014 அன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த மத்ரஸாவின் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக அதன் நிறுவனரும், முதல்வருமான ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.ஷேக் அப்துல் காதிர் என்ற எஸ்.ஏ.சி.ஹாஃபிஸா தெரிவித்துள்ளதாவது:-
திருமறை குர்ஆனை தஜ்வீத் முறையில் பார்த்து ஓத - மனனம் செய்ய பயிற்றுவித்தல், மார்க்க அடிப்படைக் கல்வியைக் கற்பித்தல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு மத்ரஸா தர்பிய்யத்தில் அத்ஃபால் - வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் துவக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த மத்ரஸாவின் சிறப்பம்சங்கள்..
>> மாணவர்கள் திருமறை குர்ஆனை ஓதப் பழகும்போதே அவர்களுக்கு அச்சர சுத்தத்துடன் - அழகிய தஜ்வீத் கலையுடன் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
>> திருக்குர்ஆனைப் பார்த்து அழகுற ஓதல் (தர்தீல்)
>> திருக்குர்ஆன் ஓதும் முறையை அறிந்து ஓதல் (தஜ்வீத்)
>> திருக்குர்ஆனை மனனம் செய்தல் (தஹ்ஃபீழ்)
>> ஒரே மாதிரியான வசனங்களை அந்தந்தப் பகுதிகளின் இடமறிந்து தெளிவுற மனனம் செய்யப் பயிற்றுவித்தல் (முத்தஷாபிஹாத்)
>> மார்க்க அடிப்படைக் கல்வி (தீனிய்யாத்)
>> திருமறை குர்ஆன் கூறும் வரலாறு (தாரீஃக்)
உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், மாணவர்களின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ப பொதுவாகவும் - தனிப்பட்ட (indivudual coaching) முறையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.
பகுதி நேர வகுப்புகள் (Part Time Class) 4 மணி நேரம், 2 மணி நேரம் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
4 மணி நேர வகுப்பு அன்றாடம் 06.00 மணி முதல் 08.00 மணி வரையிலும், 18.30 மணி முதல் 20.30 மணி வரையிலும் நடைபெறும்.
2 மணி நேர வகுப்பு அன்றாடம் 06.00 மணி முதல் 08.00 மணி வரை அல்லது 18.30 மணி முதல் 20.30 மணி வரை நடைபெறும்.
அதுபோல, 8 மணி நேரம் கொண்ட முழு நேர வகுப்பு (Full Time Class) பாடப்பிரிவும் நடைபெறுகிறது. இவ்வகுப்பு, அன்றாடம்
06.00 மணி முதல் 08.30 மணி வரையிலும்,
10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்,
15.00 மணி முதல் 16.30 மணி வரையிலும்,
18.30 மணி முதல் 20.30 மணி வரையிலும்
நடைபெறுகிறது.
உங்கள் குழந்தைகள் திருமறை குர்ஆனைப் பார்த்தும் / பாராமலும் தஜ்வீத் முறையில் முழுமையாகக் கற்றுணர்ந்து ஓதிடவும், அதன் படி வாழவும் பயிற்றுவிக்கப்படும் இந்த மத்ரஸாவில், உங்கள் மக்களைச் சேர்த்து பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலதிக விபரங்களுக்கும், மாணவர் சேர்க்கைக்கும் - +91 78100 45495, +91 97891 83931 ஆகிய எனது கைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு, மத்ரஸா தர்பிய்யத்தில் அத்ஃபால் நிறுவனரும், முதல்வருமான ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.ஷேக் அப்துல் காதிர் என்ற எஸ்.ஏ.சி.ஹாஃபிஸா தெரிவித்துள்ளார்.
மத்ரஸாவில் பயின்று வரும் மாணவர்கள் நிறுவனருடன் எடுத்துக்கொண்ட குழுப்படம்:-
மத்ரஸா குறித்த விபரங்கள் அடங்கிய பிரசுரம்:-
தர்பிய்யத்தில் அத்ஃபால் மத்ரஸா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |