காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில், இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் அண்மையில் திறப்பு விழா கண்டது. இவ்வரங்கில், முதல் முறையாக நகரளவிலான இறகுப்பந்து சுற்றுப்போட்டி - சாளை மக்காம் கோப்பைக்கான போட்டியாக இம்மாதம் 28, 29 நாட்களில் நடத்தப்பட்டது.
13 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, நேற்று மாலையில் நடைபெற்றது. போட்டியின் நிறைவில், யூஸுஃப் - எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரைக் கொண்ட HR குழும அணி முதலிடத்தைப் பெற்றது. அவ்வணிக்கான பரிசை, KSC செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 06ஆவது வார்டு உறுப்பினருமான ஏ.கே.முஹம்மத் முகைதீன் வழங்கினார்.
முத்து - முஜீப் ஆகியோரைக் கொண்ட பரிமார் ஷட்டுல் க்ளப் அணி இரண்டாவது பரிசைப் பெறத் தகுதிபெற்றது. அவ்வணிக்கான பரிசை, KSC செயற்குழு உறுப்பினர் எம்.என்.ஹாஜி முஹம்மத் (கொழும்பு) வழங்கினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில், KSC துணைச் செயலாளர் வி.எஸ்.எச்.ஃபஸ்லுல் ஹக், செயற்குழு உறுப்பினர்களான எம்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எச்.அப்துர்ரஹ்மான், கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், வெள்ளி செய்யித் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இச்சுற்றுப்போட்டிக்கான அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும், எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் (பாங்காக்) தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
M.B.S.சுலைமான்
படங்கள்:
M.ஜஹாங்கீர்
KSC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|