சஊதி அரபிய்யா அரசு மருத்துவமனையில் பணிபுரிய எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் மற்றும் அனைத்துத் துறை அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுவதாகவும், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு குடும்ப விசா, பயணச் சீட்டு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும், சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
சஊதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு, அலோபதி மருத்துவப் பிரிவின் அனைத்த் துறைகள் மற்றும் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு - சென்னை, பெங்களூரு, புதுடில்லி ஆகிய நகரங்களில் 01.02.2015 முதல் 11.02.2015 வரை நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகள் பணியனுபவம் மற்றும் 55 வயதுக்குட்பட்ட கன்சல்டன்டுகள் (Consultants), சிறப்பு மருத்துவர்கள் (Specialists) மற்றும் 40 வயதுக்குட்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் (General Practitioner) விண்ணப்பிக்கத் தகுதியுடையோராவர்.
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, பணியனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தமது முழு விபரங்களடங்கிய விண்ணப்பத்தை ovemeldr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 22502267 / 22505886 / 0 82206 34389 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |