வரும் பிப்ரவரி 01ஆம் நாளன்று (நாளை) தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நாளை ஒரே நாளில் குப்பைகளைச் சேகரித்து எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், நகராட்சியில் மொத்தமுள்ள 28 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டே நகர் முழுக்க துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர்களின் நேரத்தை விரயமாக்காமலிருக்க, பொதுமக்கள் தம் வீடுகளிலுள்ள குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை மொத்தமாகச் சேகரித்து, சாலையோரத்திலுள்ள தம் வீட்டு முகப்பில் வைத்தால், அதிகாலையில் துப்புரவுப் பணி வாகனத்தில் பணியாளர்கள் வந்து அவற்றைச் சேகரித்து எடுத்துச் செல்வர் என்றும் கூறியதோடு, இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |