மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதம் 01ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை நகரின் பல பள்ளிவாசல்களில் முஹ்யித்தீன் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில் நடப்பாண்டில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, புதுப்பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஜனவரி 21ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை 11 நாட்கள் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.
குருவித்துறைப் பள்ளியில் நாள்தோறும் மவ்லித் மஜ்லிஸ் நிறைவுற்ற பின்னர், மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரிதம், அவர்களின் போதனைகள் உள்ளிட்டவை மார்க்க அறிஞர்களால் சொற்பொழிவாக வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று (ஜனவரி 31) நிறைவு நாளன்று, குருவித்துறைப் பள்ளியில் மவ்லித் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றன. பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், அந்த மஹல்லா ஜமாஅத்தினர் உட்பட நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அதே நாளில் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளியில் நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸ் காட்சிகள்:-
மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியில், பிப்ரவரி 01ஆம் நாளன்று மவ்லித் மஜ்லிஸ் நிறைவு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது. அதன் காட்சிகள்:-
படங்களுள் உதவி:
JMAR காதிரீ
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஸெய்யிதினா பிலால் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள், படங்கள் இணைக்கப்பட்டன @ 15:10 / 06.02.2015] |