பிப்ரவரி 01ஆம் நாளன்று (இன்று) தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
இதனையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நாளை ஒரே நாளில் குப்பைகளைச் சேகரித்து எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தலைமையில், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி ஒருங்கிணைப்பில், நகராட்சியில் மொத்தமுள்ள 28 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 40 பணியாளர்கள் இணைந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக குப்பைகளைச் சேகரித்து வந்தனர்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் வளர வழிவகுக்கும் - தேவையற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள் (சிரட்டை), பயன்படுத்தப்பட்ட கோப்பைகளை அவர்கள் தனியாகச் சேகரித்து எடுத்து வந்தனர்.
இரண்டாம் கட்ட குப்பை சேகரிப்பு வரும் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளதாக, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார்.
படங்களுள் உதவி:
M.ஜஹாங்கீர்
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |