காயல்பட்டினத்திலுள்ள நியாய விலைக் கடைகள் உட்பட திருச்செந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளையும் நிர்வகிக்கும் - திருச்செந்தூர் வட்ட வழங்கல் பிரிவிற்கு, ஆர்.கோபால கிருஷ்ணன் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடும்ப அட்டைகள் வழங்கல், நியாய விலைக் கடைகள் தணிக்கை, நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஒதுக்கீடு உள்ளிட்டவை இவரது மேற்பார்வையின் கீழுள்ளவையாகும்.
ஏற்கனவே, இவர் திருச்செந்தூர் தாலுகா துணை வட்டாட்சியராக கடந்த ஓராண்டு காலமாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முறையாகச் சேர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு மாறாக - நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் பதுக்கல், கடத்தல் மற்றும் கடைப் பணியாளர்களின் தவறான நடவடிக்கைகள் உள்ளிட்டவை நடைபெற்றால், தகுந்த ஆதாரங்களுடன் தன்னை +91 94450 00373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என புதிய வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கோபால கிருஷ்ணன் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளார். |