வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், இம்மாதம் 03ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, “Case analysis: Contemporary Trends in Today’s Business Practices” எனும் தலைப்பில், ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கல்லூரி கேளரங்கில் அதன் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
வணிக நிர்வாகவியல் முதலாமாண்டு மாணவி எம்.மைமூன் ஆமினா கிராஅத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வி.சசிகலா துவக்கவுரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் ஆர்.அருணா ஜோதி, கணினி அறிவியல் துறைத் தலைவர் நேசா ஆக்னஸ் பெலின்டா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் டீ.விஜயகுமார் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
‘தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளும், அவற்றுக்கான தீர்வுகளும்’ எனும் தலைப்பில், திருவனந்தபுரம் மார் கிரிகோரியஸ் சட்டக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் வி.ஆர்.வினுலால் சிறப்புரையாற்றினார்.
மாலை அமர்வில், வயூஹா, நிர்வாக இயக்குநர் கோயமுத்தூர் சேகர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.
கல்லூரி துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் நிறைவுரையாற்றி, பட்டறையில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெ.புவனேஷ்வரி நன்றி கூற, மாணவி பல்கீஸ் புஷ்ரா துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. |