டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் முகமாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுக்க பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மா.கனகவள்ளி தலைமையில், இன்று மாலையில், காயல்பட்டினம் பேருந்து நிலையம், வாடகை வாகன நிலையம், ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளிட்ட இடங்களில், வாகனங்களின் மீது டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்களை உள்ளடக்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
திருச்செந்தூர் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தெரிவித்தார்.
கள உதவி:
S.A.K.ஸதக்கத்துல்லாஹ் |