காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், பள்ளி மாணவர்களைக் கொண்டு நகர் முழுக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி, நகராட்சி வளாகத்தில் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
“டெங்கு காய்ச்சலைத் தடுப்போம்”, “டெங்கு உருவாகக் காரணமானவற்றைத் தவிர்ப்போம்”, “டெங்குவைப் பரப்பும் கொசுவை ஒழிப்போம்” போன்ற முழக்கங்களை - நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் முன்மொழிய, மாணவர்கள் அவற்றை வழிமொழிந்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.ஐ.அஷ்ரஃப், ஜெ.அந்தோணி, கே.ஜமால், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |