உலக புற்றுநோய் நாளை முன்னிட்டு, பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக - காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில், இன்று (பிப்ரவரி 04 புதன்கிழமை) 15.00 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணியை, பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
“புற்றுநோயை ஒழிப்போம்! புது யுகம் படைப்போம்”, “பான் நமக்கு எமன்”, ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம்” உள்ளிட்ட முழக்கங்களை முழங்கியவர்களாக மாணவ-மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். அவர்களுடன் பள்ளி ஆசிரியையரும் இணைந்து பங்கேற்றனர்.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |