DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 29, 2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட ஆணை தற்போது பெறப்பட்டுள்ளது. இது குறித்து அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு, ஜனவரி 29, 2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது KEPA அமைப்பின் வழக்கறிஞரும், இது வரை பதில்கள் சமர்ப்பிக்காமல் இருந்த, மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் அமைச்சக செயலர்கள் சார்பாகவும், DCW நிறுவனத்திற்கு ஆவணங்கள் தயாரித்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான CHOLAMANDALAM MS RISK SERVICES LIMTED நிறுவனம் சார்பாகவும் வழக்கறிஞர்களும் ஆஜராகினர்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழக்கறிஞர் - தனது தரப்பு பதில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். தற்போது அது பெறப்பபட்டுள்ளது.
மாநில அரசின் சுற்றுச்சூழல் செயலரும், DCW நிறுவனத்திற்கு ஆவணங்கள் தயாரித்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான CHOLAMANDALAM MS RISK SERVICES LIMTED நிறுவனமும், பதில் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டனர். அதன்படி - அவ்விருவரும், பதில்கள் தாக்கல் செய்ய, மீண்டும் பிப்ரவரி 25, 2015 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 29, 2015 தேதிய நடப்புகள் குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள ஆணை தற்போது பெறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கு, தொடர்ந்து ஜூலை 10, 2014, ஆகஸ்ட் 28, 2014, நவம்பர் 13, 2014, டிசம்பர் 2, 2014 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்துள்ளது.
|