அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் நாடார் சமுதாயத்திற்கு அதிக இட ஒதுக்கீட்டைக் கருத்திற்கொண்டு, சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கீடு நடத்திட மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, நாடார் மக்கள் இயக்கம் சார்பில், இன்று 17.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர இளைஞரணி செயலாளர் ஜெ.ரவிக்குமார், அதன் துணைச் செயலாளர் கே.திருமால், ஆறுமுகநேரி நகர செயலாளர் எஸ்.அந்தோணிராஜ், அதன் பொருளாளர் வி.ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜெபராஜ், இளைஞரணி செயலாளர் கே.நாராயணன், திருச்செந்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் எல்.ராஜேஷ், திருவைகுண்டம் இளைஞரணி செயலாளர் சுளை ஐ.காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லெட்சுமிபுரம் கே.ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். காயல்பட்டினம் நகர இளைஞரணி தலைவர் எஸ்.லிங்கசாமி ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பீ.ரகு ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எம்.பி.சரவணக்குமார் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நாடார் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டைக் கருத்திற்கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மத்திய - மாநில அரசுகளைக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. |