திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே புதிய பயணியர் ரயில் சேவை (வண்டி எண்: 56035 / 56036) இம்மாதம் 09ஆம் நாளன்று துவக்கி
வைக்கப்படவுள்ளது. மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் சுரேஷ் ப்ரபாகர் பிரபு, புதுடில்லியிலிருந்து 18.00 மணியளவில் காணொளி காட்சி
(வீடியோ கான்ஃபரன்ஸிங்) மூலம் புதிய பயணியர் தொடர்வண்டிச் சேவையைத் துவக்கி வைக்கிறார்.
துவக்க நாள் அன்று - இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 6, சரக்குப் பெட்டி 2 ஆகியவற்றைக் கொண்டதாக இயக்கப்படவுள்ளது. வழமையான சேவை - பிப்ரவரி 10 அன்று முதல் துவங்கும். அப்போது 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
இவ்வண்டி (#56035) திருசெந்தூரில் இருந்து தினசரி 10:25 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி ரயில் நிலையத்தை மதியம் 12:15 மணிக்கு அடையும். [காயல்பட்டினம் - 10:35]
திருநெல்வேலியில் இருந்து மாலை 3:15 மணிக்கு புறப்பட்டு (#56036), திருச்செந்தூர் ரயில் நிலையத்தை 5:15 மணிக்கு அடையும். [காயல்பட்டினம் - 4:29]
இந்த தொடர்வண்டிச் சேவையின் புறப்பாடு, அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் நேரம், சேரும் நேரம் வருமாறு:-
திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கம் [#56035]
திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கம் [#56036]
திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் 6வது பயணியர் ரயில் சேவையாகும் இது.
ஏற்கனவே - திருசெந்தூரில் இருந்து காலை 7:05, 11:10 (பழனி வரை), மதியம் 2:35 (தூத்துக்குடி வரை), மாலை 4:30, 5:55 ஆகிய நேரங்களில் பயணியர் ரயில்கள் - திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து காலை 7:20, 9:35, 11:15 (தூத்துக்குடி முதல்), மதியம் 2:10 (பழனி முதல்), மாலை 6:40 ஆகிய நேரங்களில் பயணியர் ரயில்கள் - திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது.
இது தவிர - சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் செந்தூர் விரைவு வண்டி, திருநெல்வேலியில் இருந்து (#16105) காலை 6:15 மணிக்கு புறப்பட்டு, திருச்செந்தூர் ரயில் நிலையத்தை 8:25 மணிக்கு அடைகிறது (காயல்பட்டினம் - 7:29).
இதே வண்டி - திருசெந்தூரில் இருந்து (#16106) மாலை 6:50 மணிக்கு புறப்பட்டு (காயல்பட்டினம் - மாலை 7:00), திருநெல்வேலி ரயில் நிலையத்தை இரவு 8:15 மணிக்கு அடைகிறது.
|