பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியர் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பெற்றிடுவதற்காக மக்தப் மத்ரஸாக்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
தம் பகுதிகளில் புதிய மக்தப் மத்ரஸாக்களைத் துவக்கிடுவதற்காக, ஏற்கனவே நடைபெற்று வரும் மக்தப் மத்ரஸாக்களைப் பார்வையிடுவதற்காக, நெல்லை மாவட்டத்தின் ரஹ்மத் நகர், தாழையூத்து, மேலப்பாளையம், சாந்தி நகர், நெல்லை நகரம், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ தலைமையில் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நடைபெறும் மக்தப் மக்தூமிய்யாவிற்கு இன்று 16.30 மணியளவில் வருகை தந்தனர்.
அங்கு நடைபெற்ற பல்வேறு வகுப்புகளை நேரில் பார்வையிட்ட அவர்கள், பின்னர் ஒன்றுகூடி கலந்தாலோசனை மேற்கொண்டனர்.
அன்வாருஸ் ஸுஃப்ஃபா மக்தப் மத்ரஸா நிர்வாகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ அறிமுகவுரையாற்றியதோடு, புதிய மத்ரஸாக்கள் துவக்குவதற்கான நடைமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வாழ்த்துரை வழங்கினார். துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
மக்தப் மக்தூமிய்யா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:56 / 09.02.2015] |