காயல்பட்டினத்தில் நடைபெறும் சில பொது நிகழ்ச்சிகளின் நிறைவில் பனை ஓலைப் பெட்டிகளில் (மிட்டாய் பெட்டி) சோறு அடைத்து நேர்ச்சையாக வினியோகிக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. மிட்டாய்ப் பெட்டிகள் பஞ்சம் காரணமாக, தற்போது அந்த நடைமுறையும் மாறி வருகிறது.
சில இடங்களில் சில்வர் முலாம் பூசப்பட்ட (silver coated) உறைகளுக்குள், சுடச்சுட சோறு வைத்து அடைக்கப்படுகிறது. அதிமான சூடு காரணமாக உறைகளின் மீதுள்ள சில்வர் முலாம் சோற்றின் மீது அப்படியே ஒட்டிக்கொள்ள, உறை முலாமின்றி காணப்படுகிறது.
அண்மையில், காயல்பட்டினம் தீவுத்தெருவில் எஞ்சிய சோறு - உறையிலிருந்தவாறே குப்பையில் கொட்டப்பட்டிருந்தது. அவ்வழியே சென்ற மாடு ஒன்று, அதைச் சாப்பிடுவதற்காக உறையைத் திறக்க முயன்றும் பலனற்றுப் போகவே, உறையோடு சேர்த்து சுவைக்கத் துவங்கியது. இதைக் கண்ணுற்ற சில சிறுவர்கள் அந்த மாட்டிடமிருந்து உறையைப் பிடுங்க முயன்றபோது, பிடி கொடுக்காமல் வாயில் கவ்வியவாறே ஓடிச் சென்றுவிட்டது.
|