டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அவற்றின் துவக்க நிலையிலேயே ஒழிப்பதற்காக காயல்பட்டினம் நகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் ஒன்று - மருந்துப் புகையடித்தல்.
இதுகாலம் வரை சிறிய அளவிலான கருவியைக் கொண்டு, இரு சக்கர வாகனங்களில் சென்றவாறு நகர வீதிகளில் மருந்துப் புகை அடிக்கப்பட்டது. அது போதாத நிலை ஏற்படவே தற்போது நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்துப் புகையடிக்கும் பெரிய கருவி நகராட்சியால் வாங்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ற வாகனத்தில் பொருத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இயக்கத்திற்கு ஆயத்தமானவுடன், புதிய கருவியைக் கொண்டு நகர் முழுக்க மருந்துப் புகையடிக்கப்படும் என்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross