மனித உடலில் உருவாகும் நோய்களுக்கான காரணம் குறித்து சிறிதும் ஆராயாமல், அடுக்கடுக்காக நோய்களை எதிர்கொண்டு - அவற்றுக்கு நிவாரணம் தேடும் நோக்கில் ஏராளமான மருத்துவர்களைச் சந்தித்தும், மாத்திரை - மருந்துகளை உண்டும் - முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை முற்றிலும் மறந்து மனிதர்கள் தம் உடல் நலனைக் கெடுத்துக்கொள்வதாகவும், மீண்டும் சிந்தித்து வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டாலே அனைத்து நோய்களும் அகலும் என்றும், கோயமுத்தூரைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கர் என்ற நிபுணர், ‘Anatomic Therapy - செவிவழி தொடு சிகிச்சை’ எனும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட - பெரும்பாலான ஊர்களிலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தொடர் சொற்பொழிவாற்றி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது உரைகளை, YouTube இணையதளத்தில் Healer Baskar, Anatomic Therapy ஆகிய சொற்களைக் கொண்டு தேடிக் காணலாம்.
இச்சொற்பொழிவுகளின் தொகுப்புகள் அடங்கிய ஒளிப்பதிவு - காயல்பட்டினத்திலுள்ள சேனல் 7 எனும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில், ‘நம் கையே நமக்குதவி’ எனும் தலைப்பில், இம்மாதம் 07ஆம் நாள் சனிக்கிழமை முதல் சிறப்பு தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படவுள்ளது. இதுகுறித்த பிரசுரம்:-
|