மத்திய அரசின் COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA என்ற தணிக்கை அமைப்பு, தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் சிலவற்றை தேர்வு
செய்து, ஒவ்வொரு ஆண்டும் - அவற்றின் கணக்கு வழக்குகளை, சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்துகிறது.
அந்த வரிசையில், 2009-10 ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை - தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. அதில் - மாநிலத்தில் உள்ள சில உள்ளாட்சி
மன்றங்களில் காணப்பட்ட குறைப்பாடுகள் உதாரணங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
மணவாளக்குறிச்சி. இது கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டவுன் பஞ்சாயத். கனிம மணலுக்கு பிரபலமான ஊர்.
ஆகஸ்ட் 2006இல், பஞ்சாயத் நிர்வாகம், ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் என்ற தொகைக்கு, INDIAN RARE EARTHS LIMITED என்ற நிறுவனத்திடம் -
பேருந்து நிலையம் அமைக்க, நிலத்தினை குத்தகைக்கு எடுத்தது. மாவட்ட ஆட்சியர் உட்பட இதர அதிகாரிகள் வழங்கிய நிர்வாக மற்றும் தொழில்
நுட்ப அனுமதியை தொடர்ந்து, ஜனவரி 2007இல் பேருந்து நிலைய பணிகள் துவக்கப்பட்டன.
பணிகள் துவங்கி பல மாதங்கள் கழித்து - மார்ச் 2008இல் - DTCP என்ற அரசு அமைப்பிடம், அனுமதி கோரி - மணவாளக்குறிச்சி பஞ்சாயத்
விண்ணப்பம் செய்தது. பஞ்சாயத் நிர்வாகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த DTCP, விண்ணப்பத்தை நிராகரித்தது. காரணம்:
பரிந்துரைக்கப்பட்ட இடம், தடை செய்யப்பட்ட CRZ - 1 பகுதிக்குள் அமைந்திருந்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இது குறித்து கீழ்க்காணுமாறு தணிக்கை நிறுவனம், தனது அறிக்கையில் பதிவு செய்தது:
மாவட்ட ஆட்சியர், டவுன் பஞ்சாயத்துகளின் மண்டல துணை இயக்குனர் மற்றும் துணை செயற் பொறியாளர் ஆகியோர் - தேர்வு செய்யப்பட்ட
நிலத்தில் கட்டுமானம் செய்ய, சட்டப்படி அனுமதி கிடைக்குமா என்பதை ஆராயாமல், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளார்கள். இதனால் - 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயனற்ற நிலையில் உள்ளது.
இவ்விஷயம் - அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அரசு தரப்பில் - கட்டுமானங்கள் தற்காலிகமானவை என்றும், நிரந்தர கட்டுமானங்கள் -
மாநில கடலோர மேலாண்மை நிர்வாகத்தின் (STATE COASTAL MANAGEMENT AUTHORITY) ஒப்புதல் கிடைத்தப்பின் செய்யப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த பதிலை, தணிக்கை குழு ஏற்றுக்கொள்ளவில்லை.
TAMIL NADU MOTOR VEHICLES RULES சட்டத்தின்படி, D பிரிவு (CLASS D) பேருந்து நிலையத்திற்கான அனைத்து வசதிகளும் அந்த இடத்தில
அமைக்கப்பட்டுவிட்டன. அனுமதி கிடைக்காததால், இதற்கு செலவு செய்யப்பட்ட 47 லட்ச ரூபாய் வீண் செலவாகும் என தணிக்கை குழு தெரிவித்தது.
இது போன்ற சம்பவங்கள், பிற உள்ளாட்சி மன்றகளுக்கு பாடங்களாக அமைய - தணிக்கை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. காயல்பட்டினம்
நகராட்சிக்கு இது போன்ற விஷயங்களில் விதி விலக்கு உள்ளது போல் தெரிகிறது.
தனியார் ஒருவர் வழங்கிய சர்வே எண் 278 இடத்தில், குப்பைகள் கொட்டவும், பயோ காஸ் திட்டம் அமைக்கவும் - நகர்மன்றம் தீர்மானம்
நிறைவேற்றியது.
CRZ - 1 பகுதிக்குள் பெருவாரியான இடங்கள் அமைந்துள்ள இந்த இடத்தில், சாலைகள் அமைக்க CRZ விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.
இருப்பினும் - டிசம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தில், நகராட்சி ஆணையர் - இப்பகுதியில் சாலைகள் அமைக்க
தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தார். அதற்கு முன்னர், இதற்குரிய அரசு அமைப்புகளிடம் எந்த அனுமதியும் இது குறித்து
பெறவில்லை.
இதற்கிடையே, இவ்விடத்தை - நீர் தேங்கும் இடம் என்பதால், ஜனவரி 13, 2015 தேதிய கடிதம் மூலம் -
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. இருப்பினும் - நகராட்சி அதிகாரிகள், இவ்விடத்தில் - தங்கள் பணிகளை நிறுத்தவில்லை.
இவ்விடத்தை JCB வாகனங்கள் கொண்டு, சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான செலவீனங்கள் - தணிக்கை தடைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது குறித்து, அவர்கள் பெரிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை.
|