காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில், ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 01 முதல் 14 வரை, மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவாக கந்தூரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
காலை நிகழ்ச்சிகள்:
அதனடிப்படையில், நடப்பாண்டு கந்தூரி நிகழ்ச்சிகள் 22.01.2015 அன்று துவங்கி, 04.02.2015 வரை நடைபெற்றது. இந்நாட்களில் அன்றாடம் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், மவ்லித் மஜ்லிஸும் நடத்தப்பட்டது.
இரவு தொடர் சொற்பொழிவு:
25.01.2015 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.02.2015 திங்கட்கிழமை வரை ஒவ்வொரு நாளும் 20.45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெற்றன:-
கந்தூரி நாள் நிகழ்ச்சிகள்:
கந்தூரி நாளான 03.02.2015 செவ்வாய்க்கிழமையன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. கந்தூரி நிகழ்ச்சிக்கு வருகை தரும் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, மஹ்ழரா அமைந்துள்ள அம்பல மரைக்கார் தெரு சாலை முழுக்க பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மஃரிப் தொழுகைக்குப் பின், மவ்லவீ கலீஃபத்துல் காதிரீ எல்.ஓ.எம்.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன.
துஆ பிரார்த்தனை:
அன்று 20.30 மணி முதல் 21.30 மணி வரை துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. உலக சமாதானம், ஊர் ஒற்றுமை, கொள்கை பிடிப்பு, நோயற்ற வாழ்வு, மனித நேய மலர்ச்சி, குடும்ப உறவுகள், மார்க்கக் கல்வியின் மீது ஆர்வம் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ இறைஞ்சினார்.
இந்நிகழ்வுகள் அனைத்திலும், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு மஹ்ழராவையொட்டிய தென்பகுதியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
நேர்ச்சை விநியோகம்:
04.02.2015 புதன்கிழமையன்று (இன்று) ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஃபாத்திஹா துஆவுடன் நேர்ச்சை வினியோகம் துவங்கி, காலை 08.30 மணிக்கு நிறைவடைந்தது.
கந்தூரி விழா நிகழ்ச்சிகளனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியில் நேரலை செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஹ்ழரா நிர்வாகிகளும், கந்தூரி கமிட்டி நிர்வாகிகளுமான ஹாஜி எஸ்.கே.இசட்.ஜெய்னுல் ஆப்தீன், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
K.J.ஷாஹுல் ஹமீத்
மற்றும்
JMAR காதிரீ
மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |