தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், பள்ளிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 286 பள்ளிகளில் 1.84 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காத வகையில் தூய்மையாக வைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அனுகி பயன்பெறுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் பங்கேற்கும் விதமாக என் விட்டில் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுப்புழு வளர விடாமல் இருக்க அவற்றை மூடியும், தண்ணீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அகற்றியும், கொசுப்புழு வளரவிடாமல் தொடர்ந்து பராமரித்து வருவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கையொப்பம் பெற்று உள்ளோம். பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வைரஸ் காய்ச்சல் பரவாது குறித்து அவற்றின் இருந்து பாதுகாத்து கொள்ளவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |