சஊதி அரபிய்யா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக மக்கா வாழ் காயலர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு நிகழ்வு சென்ற 23.01.2015 வெள்ளிக்கிழமை இரவு 8-00 , மணியளவில் மக்கா ,அஜிசியாவில் உள்ள சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
இனிய இந்நிகழ்விற்கு மன்ற செயலர் சகோ.எஸ்.ஏ .கே.செய்யிது மீரான் தலைமை தாங்கி தலைமையுரையாற்றியும் நிகழ்ச்சியை நெறிபடுத்தினார்.
சகோ.அல்ஹாஃபிழ் ,எம்.என்.முஹம்மது ஸாலிஹ் இறைமறை ஓதினார்.
சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் அனைவரையும் அகமகிழ வரவேற்றார்.
மன்ற செயல்பாடுகள் குறித்த முழு விபரத்தையும் மற்றும் கடந்த 12 ஆண்டுகளில் செய்துள்ள நமதூருக்கான மக்கள் நலச்சேவைகள் ,பயனாளிகளுக்கு வழங்கியுள்ள உதவிகளின் முழு தகவலையும் மன்ற செயலர் சகோ.எம்.ஏ.செய்யத் இப்ராஹிம் மிக விளக்கமாக எடுத்துரைத்தார்.
சகோ .சீனா எஸ்.எச்.மொஹ்தூம் முஹம்மது கருத்துரையில் மக்கா வாழ் அன்பர்கள் இம்மன்றத்தில் இணைந்தும் மற்றும் புதிதாக வந்துள்ள நண்பர்களையும்
சேர்த்திட முயற்சிக்குமாறும் மேலும் இதற்கான தகவலை பகிர்ந்து கொள்ளுமாறும்
மன்றம் சார்ந்த பல நல்ல தகவல்களையும் எடுத்துரைத்தார்.
அடுத்து பேசிய கருத்துரையில் ஜித்தாவிலிருந்து வந்திருந்த சகோ .ஏ.எம்.செய்யத் அஹமது இந்த வருகையை போன்று கடந்த இரண்டு மாதம் முன் யான்பு நகர் சென்று அங்குள்ள நம் மக்களை சந்தித்து கலந்துரையாடியதும் அங்குள்ள நம்மவர்கள் அளித்த அமோக வரவேற்பையும் அன்பான உபசரிப்பையும் எடுத்துக்கூறி மக்கா வாழ் நீங்களும் இம்மன்றத்தில் ஒன்றாக சேர்ந்து நமதூர் மக்களுக்காக உதவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்து நடைபெற்ற கலந்துரையாடலில் வந்திருந்தவர்கள் தங்கள் கருத்துகளை
நல்ல ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஜித்தாவில் வைத்து நடைபெற இருக்கும்
மன்றத்தின் 33 -வது பொதுக்குழு கூட்டம் மற்றும் நம் காயலர் சங்கம நிகழ்வில்
பங்கேற்குமாறும் இதற்காக வேண்டி மக்காவில் இருந்து வாகன ஏற்பாடுகளை கடந்தாண்டுகளைப்போல் செய்து கொள்ள இருப்பதும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள சகோதரர்கள் முற்கூட்டியே தகவல் தந்தால் நல்ல முறையில் செய்ய உதவியாக இருக்கும் என்று சகோ.விபி .வி.எம்.டி.முஹம்மது அலி வேண்டி கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்டம் ,கூடலூரை சார்ந்த சகோ. ஹில்டன் அபாஸ் கலந்து கொண்டும் இம்மன்றத்தின் செயல்பாடுகளை கடந்த பத்தாண்டுகளாக நம் சகோதர்கள் மூலமாக அவதானித்து வருவதாயும் கல்விக்காக இக்ரா ,மருத்துவத்திற்காக ஷிபா போன்ற அமைப்புகள் உருவாக்கி காயல் மக்களுக்காக செய்துவரும் நற்சேவைகள் பற்றியும் மேலும் நம் தமிழக மற்றும் இந்திய நாட்டின் அரசு நிர்வாகப்பணிகள் மற்றும் சிவில் துறைகளான ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் படிப்புகளை தேர்ந்தெடுக்க நம் சமுதாய மாணவ மணிகள் மத்தியில் நல்லதோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றும் மிக அழகுபட எடுத்துரைத்தார்.
உறுப்பினர்களில் சிலருக்கு தங்களது நிறுவனத்தில் பணி இருந்தமையால் கலந்து கொள்ள இயலாத நிலையை முன்னதாக எடுத்துக்கூறியும் மேலும் இந்நிகழ்வு நனி சிறக்க தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.
சகோ.ஏ.எம்.நூர் முஹம்மது ஜக்கரியா இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்கள்
மற்றும் நல்ல முறையில் ஏற்பாடு செய்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை கூறிக்கொண்டார் .
துஆ கப்பாரவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது.
தகவல்:
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
நிலைப்படம் :
கே.செய்கு அப்துல் காதர்,
டி.சதக்கத்துல்லாஹ்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
காயல் நற்பணி மன்றம் ஜித்தா
|