காயல்பட்டினத்தில் வடகிழக்குப் பருவ மழைக்காலம் நிறைவுற்று, தற்போது வசந்த காலம் துவங்கியுள்ளது. புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்களில் இலைகள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் அவை உதிர்ந்து, ஓர் இலை கூட இல்லாமல் அவை பட்ட மரங்கள் போலக் காட்சியளிக்கும்.
நகரில் அதிகமாகக் காற்று வீசும் இக்காலத்தில், சிறுவர்கள் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் பட்டங்களைச் செய்து, கடற்கரையிலும், ஆங்காங்கே மைதானங்களிலும் அவற்றைப் பறக்க விட்டு இன்பம் காண்கின்றனர்.
ஆனால், வழமை போல இவ்வாண்டும் பட்டம் பறக்க விடும் போட்டி - ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடத்தப்படும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு மட்டும் நிறைவேறவில்லை. |