காயல்பட்டினம் நகராட்சி மற்றும் ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, காயல்பட்டினம் மேல நெசவுத் தெருவில் முஹ்யித்தீன் ஆண்டகை தைக்கா அருகில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்யை, இன்று 14.00 மணியளவில் நடத்தின.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதர நிலைய ஆய்வாளர் பொம்மைய்யா ஆகியோர், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலின் தன்மை மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
ஆண்களைப் போல அன்றி, கூறப்படும் செய்திகளைப் பெண்கள் தம்மோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல், தாம் பேசும் இடங்களிலெல்லாம் பேசுவர் என்பதைக் கருத்திற்கொண்டு, பெண்களை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் கூறிய அவர்கள், வரும் பிப்ரவரி 01ஆம் நாளன்று தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நாளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாகவும், குறிப்பாக அந்நாளில் அனைவரும், தமது வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், தேவையற்ற பழைய பொருட்களை - குறிப்பாக தண்ணீர் தேங்கும் பொருட்களை ஒதுக்கியெடுத்து, தம் வீடுகளுக்கு முன் வைத்தால், நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் வந்து எடுத்துச் செல்வர் என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகராட்சியின் 12, 13ஆவது வார்டுகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப், மேல நெசவுத் தெரு பிரமுகர் மாயாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |