காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 24ஆவது பரிசளிப்பு விழா, 31.01.2015 சனிக்கிழமையன்று 10 மணி முதல் 16 மணி வரை இரண்டு அமர்வுகளாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காலை அமர்வில், எல்.கே.ஜி. முதல் 03ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. எம்.ஏ.சுபைதா கலீல் முதன்மை விருந்தினராகவும் கே.எம்.எஸ்.செய்யித் ஹலீமா பாதுல் அஸ்ஹப் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகர்மன்ற 03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள் அப்துல்லாஹ் ஸாஹிப் ஆகியோர் தலைமை தாங்கினார்.
பள்ளி ஆசிரியை ஆர்.செல்வநங்கை வரவேற்றுப் பேசினார். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு மேடையில் அங்கம் வகித்தோர் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினர்.
மாலையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் 04 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பி.வசந்தி பாவநாசம் முதன்மை விருந்தினராகவும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ஐ.கணபதி செல்வி சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி தலைமை தாங்கினார். ஆசிரியை எம்.ஜெயமாலா வரவேற்றுப் பேசினார். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு மேடையில் அங்கம் வகித்தோர் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றினர்.
ஆசிரியை பீ.சத்யா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பரிசு பெற்ற மாணவ-மாணவியரை பள்ளியின் தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |