Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:23:25 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15314
#KOTW15314
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 30, 2015
DCW விரிவாக்கம் வழக்கு: பிப்ரவரி 25, 2015க்கு ஒத்திவைப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2627 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜனவரி 29 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கு, தொடர்ந்து ஜூலை 10, 2014, ஆகஸ்ட் 28, 2014, நவம்பர் 13, 2014, டிசம்பர் 2, 2014 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது.

ஆறு எதிர் மனுதாரர்களில், இது வரை - DCW நிறுவனம், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயார் செய்த இரு நிறுவனங்களில் ஒன்றான PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED ஆகியோர் பதில் தாக்கல் செய்துள்ளனர்.





ஜனவரி 29, 2015 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக வழக்கறிஞர், பதிலை தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்தார். தீர்ப்பாய அலுவலர்கள் - பதில் தாக்கல் ஆகவில்லை எனக்கூறவே, நீதிபதி - மனுதாரரான காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கு பதிலை வழங்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக வழக்கறிஞரிடம் கூறினார். [இது வரை வழக்கறிஞரால் பதில் மனு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது].

மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை வழக்கறிஞர் இத்தருணத்தில் - மத்திய அரசு துறையின் பதிலின் நகலினை கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு பிரதிவாதிக்கு மற்றொரு பிரதிவாதியின் பதில் வழங்குவது வழமை இல்லை என்றும், அவசியம் என்றால் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார். மேலும் - மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை வழக்கறிஞர், தனது தரப்பு பதிலை தாக்கல் செய்ய, இரு வாரங்கள் கால அவகாசம் கேட்டார்.

DCW நிறுவனத்திற்கு ஆவணங்கள் தயாரித்த மற்றொரு நிறுவனமான CHOLAMANDALAM MS RISK SERVICES LTD நிறுவனத்தின் வழக்கறிஞர், தங்கள் தரப்பு பதில் தயார் என்றும், தவறுதலாக - பதிலை, தாளின் இரு பக்கங்களிலும் அச்சிட்டுவிட்டதாகவும், திருத்திட நேரம் வேண்டும் எனவும் கோரினார்.

இதனை தொடர்ந்து, வழக்கினை - பிப்ரவரி 25க்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.

மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved