திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம், திருச்செந்தூரில் வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் நாளன்று நடைபெறவுள்ளதாகவும், தகுதியுடையோர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மாவட்ட நிர்வாகம் 15 துறைகளை ஒருங்கிணைத்து வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு அதே இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
வருகிற 31.1.2015 அன்று தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு மில்லர்புரம் மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றது.
போன்ற பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறவுள்ளது.
>> இந்த மாபெரும் முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரின் பாதுகாப்பாளர்களுக்கு இடவசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
>> மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
>> போக்குவரத்துக் கழகம் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று முகாம் நடைபெறும் நாட்களை பற்றியும், முகாம்களில் பயன் அடைய வேண்டிய நன்மைகள் பற்றியும் அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் எடுத்துக் கூறி பங்கேற்க செய்ய வேண்டும். வட்டாட்சியார் அவர்களுக்குj; தேவையான சான்றிதழ்கள் உடனே வழங்க வேண்டும். வட்டார வழங்கல் அலுவலர் புதிய குடும்ப அட்டை வழங்க தேவையான உதவிகளை செய்திட வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களின் தகுதிக்கு ஏற்ப தேவைகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்.
>> முன்னோடி வங்கியின் சார்பில் வங்கி கணக்குகள் தொடங்கவும், வங்கி கடன் உதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
>> மாவட்ட தொழில் மையம் மூலம் 30 சதவீத மானியத்துடன் புதிய தொழில் தொடங்குகின்ற வகையில் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இந்த மாபெரும் முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross