காயல்பட்டினம் கடற்கரையில், இம்மாதம் 22ஆம் நாளன்று அதிகாலையில், ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கிக் கிடந்துள்ளன. சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளத்தில் கடலோரத்தில் இவ்வாறு மீன்கள் செத்து ஒதுங்கியிருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள ஆலைக் கழிவுகள் காரணமாக அவை செத்து ஒதுங்கியிருக்கலாம் என - நடைப்பயிற்சிக்காக அவ்வழியே சென்ற பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
ஜெய்னுல் ஆப்தீன்
காயல்பட்டினம் கடற்கரையில் இதற்கு முன் மீன்கள் செத்து ஒதுங்கியது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[29 January 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39115
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் வாசகம் சரியே ..... உண்மையில் இந்த DCW ....தொழிற்சாலையால் தான் .... இந்த தேவைகற்ற பிரச்சனைகள் நம் ஊர் கடற்க்கரையில் ஏற்படுகிறது ......
இந்த நச்சு தன்மையால் மீனின் உயிர் இழப்பை பார்த்தால் நமக்கே பயமாக உள்ளது .....
நம் தமிழக அரசும் DCW தொழிற்ச்சாலை விசையத்டதில் மெத்தனம் காட்டுவது தான் நமக்கு வியப்பாகவே உள்ளது .....
இதற்க்கு என்னதான் முடியோ ....அல்லாஹ் தான் அறிவான் .....வல்ல நாயன் நம்மை இந்த நச்சு தன்மை உள்ள >>>> DCW தொழிற்சாலையில் இருந்து பாதுகாத்தருள்வானாகவும் ஆமீன்...... வஸ்ஸலாம்
2. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்...!!! posted bySK Shameemul Islam (Chennai)[31 January 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 39131
சென்ற மாதம் இதே வேளையில் தான் நான் நமதூர் கடற்கரையில் திருசெந்தூர் முன்னோக்கி நடைபயிற்சி செய்தபோது கூட்டம் கூட்டமாக மீன்கள் செத்துக் கிடந்ததை படமெடுத்து பலருக்கும் அனுப்பினேன். இன்று மீண்டும் அவ்வாறு நடந்த செய்தியை பார்த்தது அதிர்ச்சியாக உள்ளது.
மீன்கள் இவ்வாறு கூட்டம் கூட்டமாக சாவது போல் தன நமதூரில் உள்ள பலரும் மாண்டு போகிறார்கள் போலும். இரண்டுக்குமே உரிய காரணம் நிச்சயம் பொதுவானதாகவே இருக்கும்.
அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross