தமிழக அரசால் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்மா சிமெண்ட், காயல்பட்டினம் உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. (காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பொதுமக்களுக்காக, காயல்பட்டினம் தீவுத்தெரு – குருவித்துறைப் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் நியாய விலைக் கடை வளாகத்தில் அம்மா சிமெண்ட் விற்பனை வட்டார கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.) இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழக அரசு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் தம் துயர் துடைக்கும் வகையில் வீடு கட்டும் மூலப் பொருட்களில் இன்றியமையாததாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் விற்பனை செய்யும் அம்மா சிமெண்ட் திட்டம் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 1500 சதுர அடி வரை வீடு கட்டும் பொதுமக்களுக்கு ரூ.190/- (போர்ட்லேண்ட் போசலோனா சிமெண்ட் மூட்டை - 50 கிலோ, அனைத்து வரிகள் உட்பட) விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும்.
இத்திட்டத்தின் வாயிலாக தகுதியுள்ள பயனாளிகள் தங்களது கட்டுமான மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்கு கீழ்க்கண்ட அடிப்படையில் சிமெண்ட் மூட்டைகள் வாங்கிக் கொள்ள தகுதி பெறுகின்றனர்:-
பயனாளிகள் வீடு கட்டுவது உறுதி செய்யும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட வீடு கட்டும் திட்டத்தின் வரைபடம் இணைக்க வேண்டும். அவ்வாறு வரைபடம் இணைக்கப்படவில்லையெனில், கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் ஆய்வாளர் / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மேற்பார்வையாளர் / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாலை ஆய்வாளர் ஆகியோருள் யாரேனும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட சான்றினை இணைத்திட வேண்டும்.
இந்த திட்டத்தில் சிமெண்ட் பெற விரும்பும் பயனாளிகள் அதற்கான நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகள் தங்கள் பகுதியிலுள்ள ஊராட்சி செயலாளர்களிடமும், ஊராட்சி ஒன்றியங்களிலும், பேரூராட்சிகளிலும் அவைகளை பெற்றுக்கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், படிவங்களை தூத்துக்குடி மாவட்ட வலைத்தளத்திலிருந்தும் www.thoothukudi.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், படிவம் கிடைக்கப்பெறவில்லையெனில் படிவத்தில் கோரிய விபரங்களை மனுவாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், வீடு கட்டும் உரிமையாளர்களின் சொத்து உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களான - இடத்தின் பதிவுத்துறை ஆவணங்கள், பட்டா / சிட்டா நகல், வில்லங்கச்சான்று போன்ற பிற ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களையும், ஆவணங்களையும் அந்தந்த வட்டாரங்களிலுள்ள கீழ்க்கண்ட வட்டார கிடங்குகளில் உரிய முறையில் கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:-
அம்மா சிமெண்ட் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, அவர்தம் துயர் துடைக்கும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். எனவே, தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று, தங்களுக்கென சொந்தமாக வீடு கட்டி இன்புற்று வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |