காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவையொட்டிய ப்ரிண்ஸ் வீதியில், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீர் வெகு நாட்களாக சாலையில் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
இதுகுறித்து நகராட்சியில் அப்பகுதி மக்களால் முறையிடப்பட்டதையடுத்து, இன்று காலையில் அப்பகுதியில் இரண்டு இடங்களில் தோண்டி, பழுது சரி செய்யப்பட்டுள்ளது.
நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாயில் பழுது எதுவுமில்லை என்றும், அக்குழாயிலிருந்து இரண்டு வீடுகளுக்குச் செல்லும் வினியோகக் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாகத்தான் தண்ணீர் சாலையில் வழிந்தோடியதாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், நகராட்சி பொருத்துநர் நிஸார் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |