காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் ஜோஸப் செல்வராஜ், இன்று (ஜனவரி 29 வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.
அன்னாரின் உடல், ஆறுமுகநேரியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 30) காலை 10.00 மணியளவில், ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரம் புனித பவுல் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்ட பின், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஆசிரியர் ஆர்.ஜோஸப் செல்வராஜ், 1948ஆம் ஆண்டு பிறந்தார். எம்.ஏ., எம்.எட். பட்டதாரியான இவர், தனது 19ஆம் வயதிலேயே காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.
அப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், 2007ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.
ஆசிரியர் ஜோஸப் செல்வராஜுக்கு எஸ்தர் பர்னாந்து என்ற மனைவியும், சாமுவேல் (தொடர்பு எண்: +91 89737 28758), செல்வின் ஆகிய மகன்களும், ரூபி, ஜாஸ்மின், கெட்டி ஆகிய மகள்களும் உள்ளனர்.
தகவல்:
ஜித்தாவிலிருந்து...
சீனாஷ்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 22:42 / 29.01.2015] |