66வது குடியரசு தினவிழா இன்று சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
எமது பள்ளியில் 2014-2015ம் கல்வியாண்டில் 66வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியின் துணை செயலாளர் ஹாஜி வாவு அகமது இசாக் அவர்களும், ஹாஜி வாவு நாசர் அவர்களும் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியை எம். செண்பகவல்லி M.A.,B.Ed. அவர்களும் கலந்து கொண்டனர்.
எம் பள்ளி ஆங்கில ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஹாஜி வாவு அகமது இசாக் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்கள்.
சிறப்பு விருந்தினரான ஹாஜி வாவு நாசர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
எம் பள்ளியின் மாணவிகள் குடியரசு தினவிழா சிறப்பினை பாடல்கள் மூலகமாவும், தங்களது சொற்பொழிவின் மூலமாகவும் சிறப்பித்தனர்.
பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியைகளும், அரபிக் ஆசிரியைகளும் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ஆங்கில ஆசிரியை செல்வி. ஜெயமாலா அவர்கள் நன்றியுரையாற்றி நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |